மட்டக்களப்பில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில்இடம் பெற்றது
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) திகதி இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் காணியற்ற மக்களுக்கு துரித கதியில் பூரண உரித்து அளிப்பை வழங்குவதற்கு அதிகாரிகள் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என பணிப்புரை விடுத்ததுடன் மாவட்டத்தில் விவசாயத்துறை, மீன்பிடி துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக இதன் போது கருத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில்இடம் பெற்றது
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 25, 2024
Rating:

கருத்துகள் இல்லை: