Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

YMFE ஏற்பாட்டில் பாரிய சிரமதானமும் பயன்தரும் மர நடுகையும்.

(உமர் அறபாத் - ஏறாவூர் )
2024 ம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் இளையோர் ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் 05/06/2024  புதன்கிழமை அன்று  இடம்பெற்றன.


ஏறாவூர் இளையோர் ஊடக மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான டீ.எம்.உமர் அறபாத் தலைமையில் ஏறாவூர் வாவிக்கரை பிரதேசத்தில் ஏறாவூர் நகரசபையுடன் இணைந்து பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று காலை 7 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக 


ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம் கலந்து சிறப்பித்ததுடன் சுற்றுச்சூழலை நேசிக்கக்கூடிய பலரும்  இச்சிரமதான பணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சிரமதான நடவடிக்கையின் போது சூழலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் பொலித்தீன் பைகள்,பிளாஸ்டிக் போத்தல்கள் அகற்றப்பட்டன.


அதனைத் தொடர்ந்து 
ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாலர் பாடசாலைகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் மாணவச் செல்வங்களின் சுற்றாடலுடன் தொடர்புபட்ட
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
YMFE ஏற்பாட்டில் பாரிய சிரமதானமும் பயன்தரும் மர நடுகையும். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 08, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.