காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் கௌரவிப்பு நிகழ்வு. பிரதம அதிதியாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு (07.06.2024 வெள்ளிக் கிழமை) காத்தான்குடி மீரா பாலிகா (தேசிய பாடசாலையில்) கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் UL மன்சூர் (ஷர்கி) தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.MM.ஜவாத் (நழீமி) காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM. ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான அனைத்து மாணவர்களும் இதன் போது பெற்றோர்களின் கரங்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதி Dr.MLAM. ஹிஸ்புல்லாஹ் தனது உரையின் போது...
இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவில் மாபெரும் சாதனை படைத்தமைக்காக இப் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், மற்றும் மாணவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மேலும் இப்பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் UL மன்சூர் அவர்களினதும், ஆசிரியர்களினன், பாடசாலை சமூகம், மற்றும் சகலரினதும் பங்களிப்புடனும் இம்மகத்தான சாதனையை படைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இப்பாடசாலையின் அதிபர் கல்வி அமைச்சில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது அயராத முயற்சியின் பலனாக 35 ஆசிரியர்களை இதுவரை இப்பாடசாலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாணவிகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு தன்னாலான இயன்ற பங்களிப்புக்களை எதிர்காலத்தில் செய்வதாகவும் பாடசாலையில் கடந்த காலத்தில் இடை நடுவில் விடப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர் காலத்தில் மேற்கொள்வதாகவும் இதன் போது கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார்.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் MM ஜவாத் (நழீமி) தனது உரையில்......
சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டியதோடு பல்கலைக் கழக அனுமதியைப் பெற்ற மாணவிகள் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்ககூடிய வககையில் தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
எதிர்வரும் வருடங்களில் இவ்வாறான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் MCM.ஹம்தூன், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் உற்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் கௌரவிப்பு நிகழ்வு. பிரதம அதிதியாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2024
Rating:




கருத்துகள் இல்லை: