கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்னவின் கருத்துக்கமைய மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட பொலிஸ் நூலகம்,உடற்தகுதி மற்றும் உடற்கட்டமைப்பு மையம், நவீனப்படுத்தப்பட்ட மநாட்டு மண்டபம் என்பனவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு (13) புதன்கிழமை இடம் பெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹணவினால் நினைவுப் படிவம் திரை நீக்கம் செய்யப்பட்டு கட்டிடம் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெறும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளீயூ.இ.ஜகத் விஷாந்த, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன உட்பட மாவட்டத்திலுள்ள பிராந்தியங்களின் பொலிஸ் அத்தியட்சகர்கள்,மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு நிறுவப்பட்டு திறந்து வைக்கட்டபட்ட நூலகம்,உடற்பயிற்சி மையம்,மநாட்டு மண்டபம் என்பன முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: