ஐதேக தலைமைப்பதவியை சஜித் கோருவதாலேயே இணைவு இழுபறியில் தலதா அத்துகோரள தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச கோருவதாலேயே இரு தரப்பு இணைப்பு என்பது சாத்தியப்படாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைய வேண்டும் என்றே நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தேன். இதற்குரிய விட்டுக்கொடுப்புகளை ரணில் விக்கிரமசிங்க செய்திருந்தார். அவர் தேர்தலில்கூட போட்டியிடவில்லை. எனினும், சஜித் பிரேமதாசவே இணைவுக்கு தடையாக உள்ளார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை கோருகின்றார்.
தேசிய மக்கள் சக்தியினர் தற்போது எதிரணியில் இல்லை, அவர்கள் ஆளுங்கட்சியில் உள்ளனர். எனவே, கடந்தகாலங்களில் வழங்கி உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்.” – என்றார்.

கருத்துகள் இல்லை: