ஜனாதிபதிக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கான எரிபொருள் செலவை பொறுப்பேற்றுள்ள கட்சி
பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பரிந்துரைக்கமையவே இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் வாகனத்துக்குரிய எரிபொருள் செலவை தேசிய மக்கள் சக்தியே ஏற்றுள்ளது எனவும் அதற்கு அரசாங்க பணம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி சார்ந்த பிரசாரத்தில் ஜனாதிபதி ஈடுபடுவதாலேயே அரச நிதியை அதற்கு பயன்படுத்தாமல் கட்சியின் நிதி பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
ஜனாதிபதிக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கான எரிபொருள் செலவை பொறுப்பேற்றுள்ள கட்சி
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2024
Rating:

கருத்துகள் இல்லை: