Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது தேசிய மக்கள் சக்தி!

இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றமை இதுவே முதல் தடவை ஆகும்.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தமாக 159 ஆசனங்களைத் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி 35 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 5 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், ஐக்கிய மக்கள் சக்தி மொத்தமாக 40 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதுடன் தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சி மொத்தமாக 8 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதுடன் தேசியப் பட்டியல் ஊடாக 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, புதிய ஜனநாயக முன்னணி மொத்தமாக 5 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மொத்தமாக 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது தேசிய மக்கள் சக்தி! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 15, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.