Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். - சட்டத்தரணி பாத்திமா சஸ்னா!


பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு எதிரான பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அது தொடர்பில் அவருக்கு எதிரான கண்டங்கள் அதிகரித்து வரும் நிலையில். 

அவர் தொடர்பிலும் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான பாத்திமா சஸ்னா தனது கண்டனத்தினை தெரித்துள்ளார்.

அவருடைய கருத்து இவ்வாறு அமைந்துள்ளது...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களினால், ஒரு பெண்னை அவமதிக்கும் வகையில் “விபச்சாரி” (Prostitute) என்ற தரக்குறைவான வார்த்தை பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்டமை மிகவும் வேதனையளிக்கின்றது. 

பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் தேர்தல் மூலம் நம்மால் தெரிவுசெய்யப்பட்ட   பொறுப்பு வாய்ந்த ஒரு பாரளுமன்ற உறுப்பினரிடம் இருந்து இவ்வாறான இழிவான வார்த்தைப்பிரயோகங்கள் வருவதானது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. மேலும் இது தொடர்பில் தனது கண்டனத்தினை வெளியிட்ட சட்டத்தரணி  Swasthika Arulingam அவர்களையும் தனது முகநூல் பக்கத்தில் மிகவும் அருவறுக்கத்தக்க வார்த்தைகள் மூலம் சித்தரித்து பதிவு ஒன்றும் இட்டுள்ளார். இதற்காக நானும் ஒரு பெண் என்ற வகையில் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆகவே இவ்வாறு தொடந்து தனது பாராளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களை வைத்து தனது பாரளுமன்ற உரைகளுக்கு எதிராக மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை அறிந்து கொண்டு செயற்படும் இவருக்கு எதிராக பாராளுமன்றம் ஒழுக்காற்று  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை(Standing Order) 77(3) ஆனது பாராளுமன்றத்தினுள் செய்யப்படும் தமது தவறான செயல்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை அமர்வுகளில் இருந்து  இடைநிறுத்துவது தொடர்பான பொறிமுறையை கூறுகிறது. இந்த சட்ட ஏற்பாடானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பரந்த நடத்தை விதிகளுடன், நமது சட்டமன்ற அமைப்பின் உள்ளார்ந்த கௌரவம் மற்றும் ஒழுங்குமுறையை உறுதிப்படுத்தும் வகையில் காணப்படுறது.

அத்துடன், நிலையியற் கட்டளை பிரிவு 72, பாராளுமன்ற உரையில் தவறான வார்த்தை பிரயோகிக்கப்பட்டால் அதனை சபாநாயகர் ஹன்சார்டிலிருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது.

மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பான கோவை(Code of Conduct for members of parliament) ஆனது பாராளுமன்றத்தில் எவ்வாறு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்ற வேண்டும் என்பது தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பிடுவதுடன் ஒழுக்க ரீதியான நடத்தை தொடர்பாக ஏற்பாடு செய்கிறது.

எனவே இவ்வாறான சட்ட ஏட்பாடுகள் உள்ள நிலையிலும் ஏன் இன்னும் இவருக்கான பலமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை? மேலும், வைத்தியர் அர்ச்சுனாவின் பரந்த சமூக ஊடக செயல்பாடு, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்குள் குறிப்பிடத்தக்க துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரதிநிதிகளாக, தங்கள் கடமை அனைத்து குடிமக்களுக்கும் சேவை செய்வதே தவிர, பிரிவினையை ஏற்படுத்துவது அல்ல.

எனவே, நாம் அரசாங்கத்தை வலியுறுத்துவது:

 **அரசாங்கம் நிலையியற் கட்டளை 77(3) மற்றும் பாராளுமன்ற நடத்தை விதிகளின் அடிப்படையில் சம்பவத்தை உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டும்.* (Reports indicate that in 2018, MPs Wimal Weerawansa and Prasanna Ranaweera were suspended from Parliament for violating the code of conduct.)

 *வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் தவறான வார்த்தை பிரயோகங்கள் அடங்கிய உரை ஹன்சார்டிலிருந்து நீக்கப்பட வேண்டும்.* 

 *மென்மேலும் பெண்களை வார்த்தை ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு எதிராக அநாகரீகமாக பேசியதற்காக தண்டிக்க வேண்டும்.** 

பா.உ அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து இடைநிறுத்தப்படுவாராயின், இவ்வாறான சமூக பிரச்சனைகளை தற்போதைய அரசாங்கம் எந்த தீவிரத்துடன் பார்க்கின்றது என நாம் அறியலாம். 

 பாராளுமன்றத்திற்குள் கௌரவமான சொற்பொழிவின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வெறுப்பான வார்த்தை பிரயோகம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பிரச்சினையை பகிரங்கமாக கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல் அரசாங்கத்தின் முக்கியமான கடமை ஆகும் 

 ஜனாதிபதி-அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர்-ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர்-சரோஜா சாவித்திரி பால்ராஜ் ஆகியோர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

Fathima Sazna
L.LB(Hons) , L.LM (UK)
அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். - சட்டத்தரணி பாத்திமா சஸ்னா! Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 20, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.