இலங்கையில் வசிக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றை “வளரி கவிதை இதழ்“ வெளியிடயுள்ளதால் மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து கவிதைக்காக வெளிவந்து கொண்டிருக்கும் வளரி கவிதை இதழ் இலங்கையில் வசிக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றை 'பெண் எனும் பெருநதி' என்ற பெயரில் வெளியிடவுள்ளது.
மே மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் விழாவில் வெளியிடப்படவுள்ள இந்தக் கவிதைத் தொகுப்புக்கு இலங்கையில் வசிக்கும் பெண் கவிஞர்கள் தங்கள் கவிதைகளைக் கீழ்கண்டவாறு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கவிதைகள் 30 வரிகளுக்குள் அமைய வேண்டும், பெண்களின் நிலை குறித்த கவிதைகளாக மட்டுமே இருக்க வேண்டும், இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமே கவிதைகளை அனுப்ப வேண்டும், ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும், கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்ப வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்
+91 78715 48146.
இலங்கையில் வசிக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றை “வளரி கவிதை இதழ்“ வெளியிடயுள்ளதால் மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 21, 2025
Rating:

கருத்துகள் இல்லை: