சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினரின் இப்தார் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு கமு/ கமு/ ரியாலுல் ஜன்னா வித்யாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஏ. அஸ்தர், கிராம சேவை உத்தியோகத்தர்களான எல். நாசர், எம்.எஸ். ஐதாக், ஆரிபீன் ஆதம்பாவா, சமூர்த்தி உத்தியோகத்தர் காலிதீன், சிரேஷ்ட ஊடக இணைப்பாளர் எம்.ஐ. சம்சுதீன், ஏ.ஆர்.எம். நௌபீல் உட்பட அமைப்பின் பிரதித் தலைவர் எம்.மஹ்தியா, உப தலைவர் ஏ. நூர்தீன், செயலாளர் ஏ.ஆர். நஸ்மிலா, உபசெயலாளர் ஏ. ஆதம்பாவா, பொருளாளர் ஏ. காமிலா, கணக்காய்வாளர் ஏ.ஏ. கபூர், அமைப்பாளர் எம்.ஐ. வதூர்தீன், ஆலோசகர்களான எம். வை. எம். நயீம், ஏ.ஆர்.எம். ரூமி உட்பட செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினரின் இப்தார் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 21, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 21, 2025
Rating:





கருத்துகள் இல்லை: