காசாவில் இஸ்ரேல் கோரத் தாக்குதல்: 112 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழந்தனர்.
காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுல் செய்யப்பட்டது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின.
பிணை கைதிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள பள்ளி முகாம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழந்தனர். இதனால் காசாவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை: