மலையக அரசியல்வாதிகளின் பைல்களும் உள்ளன: திருடர்கள் நிச்சயம் சிறைக்கு செல்வார்கள்!
வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என்றல்ல, எந்த அரசியல்வாதி ஊழல் செய்திருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஊழல் செய்தவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யும். எவருடனும் எமக்கு கோபம் கிடையாது. ஆனால் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவோம் எனவும் அவர் கூறினார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
சில அரசியல் வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவை இன்னும் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவரின் நிகழச்சி நிரலுக்கமைய செயல்பட்டுவருகின்றனர். ஆனால் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் செயல்பட்டு வருகின்றோம். தேசிய மக்கள் சக்திதான் பாதீட்டை தயாரித்தது.
ரணில் விக்கிரமசிங்க தான் செய்த குற்றங்களுக்காக தண்டனை பெறக்கூடும். எனவே, அவரை காப்பாற்றுவதற்காகவே இவர்கள் கதை கூறிவருகின்றனர். இவர்கள் என்ன கூறினாலும் புத்திஜீவிகளாக மக்கள் அதனை ஏற்கமாட்டார்கள்.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையுடன் தனி வீடுகள் வழங்கப்படும். ஒருபோதும் மாடி வீட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்மாட்டாது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களே மாடி வீடு பற்றி கதைத்து வருகின்றனர்.
பொதுத்தேர்தலின் போது வழங்கியது போன்று உள்ளுராட்சிசபைத் தேர்தலின் போதும் மலையக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்குவார்கள்.
மலையக அரசியல்வாதிகள் தொடர்பான பைல்களும் உள்ளன. தேர்தலின் பின்னர் அவை விசாரணைக்கு உட்படுத்தப்படும். திருடர்கள் எந்த பிரதேசம் என்பது முக்கியம் அல்ல, அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். சட்டம் தன் கடமையை செய்யும்.” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

கருத்துகள் இல்லை: