இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில்!
130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி எச்சரித்துள்ளார்.
அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” எனவும் அவர் கூறியுள்ளார்.
நன்றி – தி ஹிந்து தமிழ்

கருத்துகள் இல்லை: