தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்!
”வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை’ யை உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள மே தின செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள மே தின செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் தெளிவான அறிகுறிகள் இப்போது அனைவருக்கும் தெரிகின்றன.
அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை உட்பட விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உற்பத்தியாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்மைகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
நாளாந்தம் மாறிவரும் உற்பத்தி ஆற்றலுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் உரிமைகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூகம் கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
கருத்துகள் இல்லை: