Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுத் தலைவரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிற்கு 03  உறுப்பினர்களும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கு 03  உறுப்பினர்களும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், 6 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்கு  நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் முழு விபரம் பின்வருமாறு,

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, (திருமதி) சட்டத்தரணி சாகரிகா அதாவுத, (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, கந்தசாமி பிரபு, விஜேசிரி பஸ்நாயக்க, திலிண சமரகோன், (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, கே.இளங்குமரன், ரவீந்திர பண்டார, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோரும்

கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு அபூபக்கர் ஆதம்பாவா, கிருஷ்ணன் கலைச்செல்வி, நிலூஷா லக்மாலி கமகே, சுகத் வசந்த த சில்வா, சுஜீவ திசாநாயக்க, சஞ்ஜீவ ரணசிங்க, சுனில் ராஜபக்ஷ ஆகியோரும்

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு முனீர் முலாபர், நிஹால் அபேசிங்க, சமன்மலீ குணசிங்க, (பேராசிரியர்) சேன நாணயக்கார, எஸ். ஸ்ரீ பவானந்த ராஜா, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம ஆகியோரும்

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ரொஷான் அக்மீமன, உபுல் கித்சிறி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோரும்

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு சதுரங்க அபேசிங்க, அர்கம் இல்யாஸ், லசித் பாஷண கமகே, தனுர திசாநாயக, சட்டத்தரணி ஹசாரா லியனகே, ஜனக சேனாரத்ன, சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு Reviewed by www.lankanvoice.lk on மே 12, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.