காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வும் பாராட்டு நிகழ்வும்`
காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியில் அறபு, இஸ்லாமிய கற்கைகள் உயர்தரப் பிரிவில் 2025/2026ம் கல்வியாண்டில் இணைந்து கொண்ட புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வும், உயர்தர பிரிவு மற்றும் அல்குர்ஆன் மனனப் பிரிவுகளில் சிறந்த கல்வி அடைவுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வும் நேற்று (2025/05/13) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மீனா பீச் பலஸில் அதன் தலைவர் அதன் தலைவர் அஷ்ஷெய்க் MCM. றிஸ்வான் (மதனி) BA அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அறபு, இஸ்லாமிய கற்கைகள் உயர்தரப் பிரிவில் 2025/2026ம் கல்வியாண்டில் இணைந்து கொண்ட புதிய மாணவிகள் முதலாம் வருட மாணவிகளால் வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ஐந்து மாணவிகளும் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோன்று சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட அல்குர்ஆன் போட்டி பரீட்சையில் தேசிய மட்டத்திற்கு தெரிவான எமது கல்லூரியின் அல்குர்ஆன் மனனப்பிரிவைச் சேர்ந்த ஆறு மாணவிகளும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோன்று எமது ஊரின் மூத்த சமூக சேவையாளரும் நஸீலா பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான அல்ஹாஜ். IL. அக்பர் JP அவர்கள் எமது ஊருக்கு ஆற்றிய கல்வி மற்றும் வாழ்வாதார சேவைகளை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன் போது அல்ஹாஜ். IL. அக்பர் JP அவர்களால் எமது கல்லூரிக்கு ஒரு தொகுதி ஒலிபெருக்கி சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வும் பாராட்டு நிகழ்வும்`
Reviewed by www.lankanvoice.lk
on
மே 14, 2025
Rating:

கருத்துகள் இல்லை: