உதை பந்தாட்ட துறையை மேம்படுத்துவதே இலக்கு - காத்தான்குடி கால் பந்தாட்ட சம்மேளனம்.
(எம்.பஹத் ஜுனைட்)
உதை பந்தாட்ட விளையாட்டு துறையை மேம்படுத்துவதுடன் இளைஞர்களுக்கு தொழில் துறையோடு இணைந்ததாக விளையாட்டை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு திட்டங்களை வகுத்துவருவதாக காத்தான்குடி கால் பந்தாட்ட சம்மேளம் தெரிவித்தது.
காத்தான்குடி கால் பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்.கே.எம்.அறபாத் தலைமையில் புதன்கிழமை (25) சம்மேளனத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
உதை பந்து விளையாட்டுத் துறை வீரர்கள் மற்றும் ரசிகர்கள் குறைந்து வருவதாகவும் அதனை சீரமைக்க சிறந்த பிரமாண்ட உதை பந்து விளையாட்டு போட்டிகளை நடாத்துவதன் மூலம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் அதே போன்று சிறந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்வதில் கழகங்கள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர் காரணம் வீரர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளே. இவை தொடர்பில் கவனம் எடுத்து அதற்கு ஏற்ற திட்டங்களை காத்தான்குடி கால் பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுக்கவுள்ளது.
இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்க்கு நிதி மற்றும் அனுசரணை பெரியளவில் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எம்.ஏ.சப்ரி,
பொருளாளர் எம்.ஐ.எம்.பைஸர், உப தலைவர்களான ஏ.எல்.எம்.ரஜாய், பி.எம்.எம்.முஹ்சின், ஏ.எல்.எம்.இப்றாஹிம் மற்றும் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்ஹர் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
உதை பந்தாட்ட துறையை மேம்படுத்துவதே இலக்கு - காத்தான்குடி கால் பந்தாட்ட சம்மேளனம்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 26, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 26, 2025
Rating:



கருத்துகள் இல்லை: