தேசிய மக்கள் சக்தியினால் காத்தான்குடி அல்ஹிறா மகாவித்தியாலய மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு
நாடளாவியரீதியில் பாடசாலை மட்ட கிரிக்கற் கழகங்களை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அதன் தொடரில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சானது பாடசாலை கிரிக்கற் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதான வசதிகளை நாடளாவிய ரீதியில் மேம்படுத்தி வருகின்றது.
அதன் தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் கடின பந்து ஆடுகளம் மற்றும் கடின பந்து கிரிக்கற் விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றிற்காக சுமார் 1.3 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது இதன் அடிப்படையில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி செயற் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு இந்நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதி ஒதுக்கீட்டிற்கூடாக காத்தான்குடி மட்/மம/ அல்ஹிறா மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கடினபந்து ஆடுகளம் மற்றும் கடினபந்து கிரிக்கற் விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றினை உத்தியோகபூர்வமாக பயணாளிகளான மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு
19/08/2025 அன்று அதிபர்
ஏ.எம்.றபீக் அவர்களின் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே.எம்.அப்துல்லாஹ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளரும் கடற்றொழில் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எம்.ஏ.நஸீர் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் சுற்றாடல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடலுக்கான அமைப்பாளருமான எம்.பி. எம் பிர்தௌஸ் நளீமி, மட்டக்களப்பு மாநகரசபையின் கௌரவ உறுப்பினர் ஏ.சீ.எம்.லத்தீப் ,மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் வை. ஆதம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளர் அர்ஷத், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எம்.றியால் பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் அஸாருத்தீன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களான
அல்ஹாஜ்.ஜெமஸ்த்,அஸ்மி தாஜுதீன்,சிறாஜ் , ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியினால் காத்தான்குடி அல்ஹிறா மகாவித்தியாலய மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 20, 2025
Rating:

கருத்துகள் இல்லை: