கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும்இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவருக்கிடையிலான சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் அல்-அமெரி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு (21) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலா, மீன்பிடி மற்றும் விவசாயத் தொழில்களில் முதலீடு செய்வது மற்றும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும்இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவருக்கிடையிலான சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 22, 2025
Rating:

கருத்துகள் இல்லை: