ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு!
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா அடிப்படையில் சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள் எனவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்தபோதிலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது குறித்து இந்தியா இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்திய அரசாங்க வட்டாரங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று தெரிவித்தன.
டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி வேகமாக வளர்ந்துள்ளது. 2021-ல் உக்ரைன் போருக்கு முன்பு, ரஷ்யாவிடமிருந்து 3 சதவீதம் மட்டுமே எண்ணெய் வாங்கிய இந்தியா, தற்போது 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை எண்ணெய் வாங்கி வருகிறது.
ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 04, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 04, 2025
Rating:

கருத்துகள் இல்லை: