விளையாட்டு அமைச்சினால் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் காத்தான்குடி அந்-நாஸர் மகா வித்தியாலயத்திற்கு வழங்கிவைப்பு.
இலங்கை விளையாட்டு அமைச்சினால் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதெற்கென வழங்கப்பட்ட ரூபாய் மூன்று இலட்சம் பெறுமதியான கடினபந்து (Hard Ball) கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் இன்று (19.08.2025) காத்தான்குடி மட்/மம/ அந்-நாஸர் மகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் ஜனாப் MA.அப்துர் ரஹ்மான் (SLPS) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளான கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் இணைப்புச் செயலாளர் எம்.கே.எம். அப்துல்லாஹ், காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், கடற்றொழில் அமைச்சின் இணைப்பாளருமான எஸ்.எம்.ஏ. நஸீர், பொதுமக்கள் தொடர்பாடலுக்கான அமைப்பாளர் மற்றும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளரும், சுகாதார அமைச்சின் இணைப்பாளருமான அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் மஞ்சந்தொடுவாய் 16ம் வட்டார மாநகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் அப்துல் லத்தீப், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் MY.ஆதம்லெப்பை, காத்தான்குடி-01 மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் வட்டார ஒருங்கிணைப்பாளருமான முஹம்மது ரமீஸ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
விளையாட்டு அமைச்சினால் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் காத்தான்குடி அந்-நாஸர் மகா வித்தியாலயத்திற்கு வழங்கிவைப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: