Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஏறாவூர்பற்று பிரதேசசபை தவிசாளர் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு நன்றி தெரிவிப்பு


காத்தான்குடி நகரில் சேகரிக்கப்படும் வரும் உக்க முடியாத குப்பைகள் ஏறாவூர் பற்று பிரதேசசபையின் கீழ் இயங்கிவரும் கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டு இருந்தது. 

நகர சபையை  பொறுப்பேற்ற பின்னர் நகர முதல்வரால் உக்க முடியாத குப்பைகளை கொடுவாமடுவில் கொட்டும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் நிறுத்தப்பட்டு கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் உள்ள Land fill இற்குள் காணப்படும் குப்பைகள் மீது மணல் பரவும் வேலைத்திட்டம் இடம் பெற்றது.

இதன் போது ஏறாவூர்பற்று பிரதேசசபை தவிசாளர் மு.முரளிதரன் அவர்களால் நகர முதல்வர் SHM அஸ்பர் JP க்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய காத்தான்குடி நகர சபைக்கு சொந்தமான டிப்பர் வாகனத்தினையும் அதற்குரிய எரிபொருளினையும் அத்துடன் குறித்த வாகனத்தின் சாரதியினையும் மேற்படி வேத்திட்டத்திற்காக கடந்த 04.08.2025ஆம் திகதி தொடக்கம் 14.08.2025ஆம் திகதி வரை வழங்கி இருந்தனர்.

தற்போது வேலைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் கடந்து 18.08.2025 திங்கள் கிழமை முதல் மீண்டும் கொடுவாமடுவிற்க உக்க முடியாத குப்பைகளை அனுப்பும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஏறாவூர்பற்று பிரதேசசபை தவிசாளர் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு நன்றி தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 22, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.