காத்தான்குடி மோனாஷ் ஆங்கில அகாடமியின்; 20ஆவது வருட பரிசளிப்பு விழா.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி –
மோனாஷ் ஆங்கில அகாடமியின் (Monash English Acadamy) 20ஆவது வருட பரிசளிப்பு விழா - 2025 இன்று (20) சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மோனாஷ் ஆங்கில அகாடமி இயக்குநர் கே.எல். முபீன் மற்றும் முதல்வர் ஹில்மியா முபீன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆய்வு மையத்தின் பிரதி இயக்குநருமான சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி இயக்குநர் ஏ.ஜி.எம். ஹக்கீம், மனித உரிமை ஆணையாளரும், மோனாஷ் ஆங்கில அகடமியின் ஆலோசகருமான ஏ.சி.ஏ. அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக பல்வேறு துறைகளின் பிரமுகர்கள், மருத்துவர்கள், பாடசாலை அதிபர்கள், கல்வி நிர்வாகிகள், வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு, நடாத்தப்பட்ட பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
காத்தான்குடி மோனாஷ் ஆங்கில அகாடமியின்; 20ஆவது வருட பரிசளிப்பு விழா.!!!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 20, 2025
Rating:

கருத்துகள் இல்லை: