காத்தான்குடியில் இடம்பெற்ற; 35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “வளமான நாடும் அழகான வாழ்க்கையும் – மறுமலர்ச்சி நகரம்” என்ற கருப்பொருளில் 35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று (19) வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது மைதானத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபையின் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன், கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பணிப்பாளர் எஸ்.யூ. சுசந்த, காத்தான்குடி நகரசபையின் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். ஜெஸீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக காத்தான்குடி நகரசபை செயலாளர் றினோஸா முப்லிஹ், கணக்காளர் ஏ.எம். மனாசிர் அஹ்ஸன் உட்பட காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், பிரதேச இளைஞர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
காத்தான்குடியில் இடம்பெற்ற; 35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா.!!!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: