கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - பன்மை நோக்கு – ஆய்வரங்கு
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - பன்மை நோக்கு- என்ற ஆய்வரங்கு இம்மாதம் 21, 22 ஆகிய திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முதல்நாள் 21.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அமரர் "தமிழ் முழக்கம்'' புலவர் முஹம்மது காஸிம் ஆலிம் அரங்கு "இஸ்லாம் வளர்த்த தமிழ்" என்ற தலைப்பில் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் தலைமையில் ஆய்வரங்கு ஆரம்பமாகும்,
தொடக்கவுரையை மூத்த நிர்வாகத்துறை அதிகாரி ஏ.பீ.எம்.அஷ்ரஃப் அவர்கள் நிகழ்த்த, சிறப்புரையாக "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்: மரபும் மாற்றமும்' என்ற தலைப்பில் எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷ்ஹுர் அவர்கள் உரையாற்றுவார்.
22.11.2025 காலை 9.30 மணிக்கு "அப்துல் ஹமீத் பாகவி அரங்கு" இஸ்லாமும் தமிழும்: வளமும் தளமும்" என்ற தலைப்பில் ஆய்வாளர் ஏ.எம்.நஹியா அவர்கள் தலைமையில் நடைபெறும்.
இவ் ஆய்வரங்கில் "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் : மெய்யியல் பார்வை என்ற தலைப்பில் எழுத்தாளரும், ஆய்வாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.என்.மர்சூம் மௌலானா அவர்களும்,
"தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் முன்னோடிகள்" என்ற தலைப்பில் எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்களும்,
"அறிஞர் சித்திலெப்பையின் சமூகம்சார் பன்முகப்பார்வை" என்ற தலைப்பில் எழுத்தாளர் நியாஸ் ஏ ஸமத் அவர்களும்,
''அருள்வாக்கி எனும் உறவுப் பாலம்" என்ற தலைப்பில் விரிவுரையாளரும், உப அதிபருமான ஏ.எம்.மிஹ்ழார் அவர்களும்,ஆய்வேடுகளை சமர்பித்து உரையாற்றுவார்கள்.
22.11.2025 மாலை 3.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க கௌரவ உறுப்பினர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் தலைமையில் ''பண்ணாமரத்துக் கவிராயர் அரங்கில் (ஸய்யத் முஹம்மத் பாருக்) "நவீன கவிதைவெளி" என்ற தலைப்பில் ஆய்வரங்கு நடைபெறும்.
இவ் ஆய்வரங்கில் "புரட்சிக் கமால் கவிதைகள்" என்ற தலைப்பில் எழுத்தாளர் ரக்ஷானா ஷரிபுத்தீன் அவர்களும்,"அல் அஷுமத் கவிதைகள்" என்ற தலைப்பில் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான வசந்தி தயாபரன் அவர்களும்,
"எம்.ஏ.நுஃமான் கவிதைகள்" என்ற தலைப்பில் எழுத்தாளரும், கவிஞருமான முல்லை முஷ்ரிபா அவர்களும்,''பண்பாட்டு பெரு நிலப்பரப்பில் பலஸ்தீனக் கவிதைகள்" என்ற தலைப்பில் எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷ்ஹுர் அவர்களும், ஆய்வேடுகளை சமர்பித்து உரையாற்றுவார்கள்.
கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கியக்குழுச் செயலாளர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் அவர்கள் நிறைவுரையினை நிகழ்த்துவார்.
WRIBE's Bonn
General Secretary Colombo Tamil Sangam
Society Ltd. No. 07, Sangam Lane,
Colombo-06.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - பன்மை நோக்கு – ஆய்வரங்கு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 17, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 17, 2025
Rating:


கருத்துகள் இல்லை: