Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பில் "ஏட்டுலா கனவாக்கம்" அமைப்பின் இரட்டை நூல் வெளியீடு விழா வெற்றிகரமாக நிறைவு


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு  ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர்களான பாத்திமா ஹகீமா அமீனுதீன் எழுதிய “என்னைத் தேடாதீர்கள்” மற்றும் அதீனா அபூ உபைதா எழுதிய “நிசப்த வியாக்கியானம்” எனும் இரு கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று
2025 நவம்பர் 02ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை  ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் ஏட்டுலா கனவாக்கம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினரும், ஜே.எம்.ஐ நிருவனத்தின் பணிப்பாளருமான ஜே.எம்.ஐ இஹ்சான் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


ஹெம்மாதகமை பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது ஐக்கிய அமீரகத்தில் பணிபுரிந்துவருபவருமான இலக்கிய செயற்பாட்டாளர் ஆஷிக் ஹுசைன் அவர்களை பணிப்பாளராக கொண்டு இலைமறை காய்களாய் இருக்கும் சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட
“ஏட்டுலா கனவாக்கம்” அமைப்பின் இரட்டை நூலாக இது வெளியீடு செய்யப்பட்டது.


“இலக்கிய உலகில் 
உலா வரக் காத்துநிற்கும்
படைப்புகளை கோர்த்து
புத்தகமாக்கும் ஓர் முயற்சி” 

எனும் தொனிப்பொருள் தாங்கிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முகாமைத்துவ பீடம், கணக்கியல் பேராசிரியர் கலாநிதி. எம்.சி.ஏ. நாஸர் 
PhD (NUM, மலேசியா)
LLB (OUSL) அவர்களும்,
சிறப்பு அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கலாநிதி. எப்.எச்.ஏ. ஷிப்லி ஹஸன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


மேற்படி விழாவில் பலதரப்பட்ட ஆளுமைகள், கல்விமான்கள், உலமாக்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் உற்பட நூலாசிரியர்களின் குடும்பத்தினர்கள் என பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





மட்டக்களப்பில் "ஏட்டுலா கனவாக்கம்" அமைப்பின் இரட்டை நூல் வெளியீடு விழா வெற்றிகரமாக நிறைவு Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 04, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.