மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு பிரதேசத்திலும் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்தல்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு பிரதேசத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கொண்டு சுய உதவிக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
இதற்கமையாக பதவி சிறிபுர பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒன்று சேர்த்து (19) மாவட்ட இணைப்பாளர் சமூக சேவைகள் த. பிரணவன் தலைமையில் சுயஉதவிக் குழு கூட்டம் பதவி சிறிபுர பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய உறுப்பினர்களின் பொறுப்பு மற்றும் கடமைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் செயற்பாடுகள் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தினால் வழங்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: