அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் - புனரமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் கையளிப்பு.!!!
காத்தான்குடியில் மிகவும் பழைமை வாய்ந்த அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் (Conference Hall / Auditorium) கையளிக்கும் நிகழ்வு இன்று (05) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது ஊடகவியலாளர் எம்.எச்.எம். அன்வர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ், பாடசாலையின் அதிபர் எம்.பி.எம்.றபீக் தலைமையில் நடைபெற்றது.
1992 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தராத்தில் கல்வி கற்ற மாணவர்களின் பங்களிப்பினால், சுமார் ரூ.5.5 இலட்சம் செலவில் மண்டபம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹக்கீம் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கு இத்தகைய பங்களிப்புகள் பெரிதும் உறுதுணையாக அமைவதாக பாடசாலையின் அதிபர் றபீக் தெரிவித்ததோடு, பக்க பலமாக இருந்து செயற்பட்ட பழைய மாணவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் - புனரமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் கையளிப்பு.!!!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: