இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
76வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தலைமையகத்திற்கு வந்த பிரதி அமைச்சரை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
இதன் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) அவர்கள் ஜனாதிபதியின் சார்பாக, தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், யுத்தத்திற்கு பிந்தைய மறுகட்டமைப்புக்கு அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்பிற்கும், நெருக்கடியான சூழ்நிலைகளில், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தேசிய அவசர நிலைமைகளின் போதும் திறம்பட செயற்பட்ட இலங்கை இராணுவத்தின் உறுதியான அர்ப்பணிப்புக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இராணுவத்தில் தனது சொந்த அனுபவங்களைப் மேற்கோள் காட்டி பேசிய அவர், இராணுவ தொழில்முறைக்கு அடித்தளமான ஒழுக்க விழுமியங்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். முன்மாதிரி, வழிகாட்டுதல் மற்றும் இராணுவ தரங்களை உறுதியாக மற்றும் நியாயமாக அமுல்படுத்துவதன் மூலம் ஒழுக்கத்தை நிலைநிறுத்துமாறும் அவர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், அனைத்து விடையங்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் அதேவேளை, உயர் தொழில்முறை தரங்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
தேசத்தை கட்டியெழுப்புவதில் வளர்ந்து வரும் தேசிய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பிரச்சினைகளுக்கு திறம்பட பதிலளிக்க பல்துறை மற்றும் தகவமைப்பு அணுகுமுறையின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
ஊழல் ஒழிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இராணுவ வளங்கள் மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். எவ்வடிவத்திலாலான ஊழலும், பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்து, நாம் பாதுகாக்க கடமைப்பட்டுள்ள மதிப்புகளையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் முகாமைத்துவ முறைமையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
செயல்பாட்டுத் திறன் மற்றும் வீரர்களின் நலனை உறுதி செய்வதில் கட்டளைப் பொறுப்பு மற்றும் மேற்பார்வையின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். அவர்களின் உடல் உள நல்வாழ்வு, தொழில்முறை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும், மேலும் ஊனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் பாதுகாப்பு தொடர்பில் வலியுறுத்தி, ஒவ்வொரு இராணுவ தளபாடமும் மிகுந்த விழிப்புணர்வுடன் பாதுகாக்கப்பட வேண்டும். மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் வலுப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் இராணுவ சொத்துக்களைப் பாதுகாப்பதில் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்யவும் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளையும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் மேற்பார்வையை வலுப்படுத்தவும், ஆயுதங்களின் முகாமைத்துவத்தை மேம்படுத்தவும், முக்கியமான இராணுவ சொத்துக்களைப் பாதுகாப்பதில் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார்.
தனது உரையை நிறைவு செய்த பிரதி அமைச்சர், இலங்கை இராணுவத்திற்கு அரசாங்கம் வழங்கும் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் தொழில்முறை, ஒற்றுமை மற்றும் மீள்தன்மையுடன் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் அதன் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இராணுவத் தலைமையகத்தில் பிரதி அமைச்சரின் உரையில் பங்கேற்றனர்.
(நன்றி.defence)

கருத்துகள் இல்லை: