சர்வதேச அறபு மொழி தின போட்டிகள் காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் இடம்பெற்றது.
சர்வதேச அறபு மொழி தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் சர்வதேச அறபு மொழி தின போட்டிகள் கடந்த 2025.10.05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணி முதல் 01.00 மணிவரை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அறபுப் பேச்சு, அறபு கஸீதா, அறபு எழுத்தணி, தமிழ்ப் பேச்சு மற்றும் அறபு உரையாடல் உள்ளிட்ட இன்னும் பல போட்டிகள் இடம்பெற்றன.
இப்போட்டி நிகழ்ச்சிகளின் பிரதான நடுவர்களாக:
வாழைச்சேனை மர்க்கஸ் அந்நூர் அறபுக்கல்லூரி முதல்வர் கலாநிதி அஷ்ஷெய்க். M.B.M. இஸ்மாயீல் (மதனி), சவலக்கடை தாருல் ஹிக்மா அறபுக்கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க். A.C. தஸ்தீக் (மதனி) BA, ஏறாவூர் மஃஹதுல் ஹைறாத் அறபுக்கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க். J.M. ஸியாத் (மதனி) BA, புதிய காத்தான்குடி நூறாணிய்யா மகளிர் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். M.S.M. முபாறக் (றியாழி)MA, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். A.L. றிஸ்வி (பலாஹி) BA, காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனப்பிரிவு பகுதித்தலைவர் அஷ்ஷெய்க். A.J ஜவாஹிர் (மதனி)BA,
காத்தான்குடி இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை பெண்கள் பிரிவு அதிபர் அல்ஹாஜ். MHAM. இஸ்மாயீல் M.A காத்தான்குடி சித்தீக்கிய்யா மகளிர் அறபுக்கல்லூரியின் உப அதிபர் மௌலவி. A. அப்துல் அஸீஸ் (பலாஹி) மற்றும் காத்தான்குடி பிஸ்மி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மௌலவி. M.B.M. பாஹிம் (பலாஹி), ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச அறபு மொழி தின போட்டிகள் காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் இடம்பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2025
Rating:

கருத்துகள் இல்லை: