தெற்காசியாவின் வேகமான தடகள வீரர்களாக சாமோத் யோதசிங்க மற்றும் சபியா யாமிக் மகுடம் சூட்டப்பட்டமையால் இராணுவத்திற்கு பெருமை
இந்தியாவின் ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சாமோத் யோதசிங்க 10.30 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தையும் தெற்காசியாவின் வேகமான மனிதர் என்ற பட்டத்தையும் வென்றார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில், சபியா யாமிக் 11.53 வினாடிகளில் ஓடி தங்கம் வென்று தெற்காசியாவின் வேகமான பெண்மணி ஆனார். அதே நேரத்தில் இராணுவ தடகள வீராங்கனை அமாஷா டி சில்வா அதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் விக்னராஜ் வக்சன் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றடுடன், ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பசிந்து மல்ஷான் 16.19 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கம் வென்றார்.armynew
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 26, 2025
Rating:


கருத்துகள் இல்லை: