நிந்தவூரில் ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் புலமைச் சீட்டுகளுக்கு கௌரவம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு (SAMS SRILANKA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிந்தவூர் கோட்டத்தில் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் பிரம்மாண்டமான நிகழ்வு SAMS SRILANKA வின் தலைவர் ஏ.ஜே. ஜனூபர் தலைமையில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரும் முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல்.எம். முதர்ரிஸ், கல்முனை கல்வி நிலைய முன்பள்ளி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். றஸீன் (ADE), ஓய்வு பெற்ற முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான ஏ.எம். ஜௌபர், அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.சீ. ஹாமீது, கல்முனை கல்வி வலய முன்பள்ளி ஆசிரிய ஆலோசகர்களான ஐ.எல். அப்துல் ரஹ்மான், எஸ்.எம். அன்ஸார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, இந்த ஆண்டின் இளம் சாதனையாளர் விருது சம்மாந்துறையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவிற்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்த கொண்ட பிரதம அதிதிக்கு SAMS SRILANKA அமைப்பின் சிரேஷ்ட ஆலோசர்களான கலாபூசணம் எஸ். தஸ்தகீர், தேசமான்ய ஏ.எல். நிஸாமுதீன் மற்றும் SAMS SRILANKA வின் தலைவர் உட்பட அதிதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நிந்தவூரில் ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் புலமைச் சீட்டுகளுக்கு கௌரவம்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2025
Rating:

கருத்துகள் இல்லை: