காத்தான்குடி பிரதேச செயலாளர் தலைமையில்இக்பால் வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்
உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள் எனும் தொனிப்பொருளில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தினத்தினை முன்னிட்டு புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் பகுதியை வலுவூட்டும் செயற்திட்டத்தின் ஊடாக அல் இக்பால் வித்தியாலய மாணவச் செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பெருமையோடு கௌரவப்படுத்தும் சிறுவர் தின கொண்டாட்டம் ஒக்டோபர் ( 01) புதன் கிழமை இக்பால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்விவலய ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஆர். ஜவாத் ஏ.எல்.பாயிஸ், தஸ்லீமா றிஸ்வி,இக்பால் வித்தியாலய அதிபர் எம்.கனீபா உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா , நிருவாக உத்தியோகத்தர் எம். ரஊப்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தனூஜா,
நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இக்பால் வித்தியாலய ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பாடசாலையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் தலைமையில்இக்பால் வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2025
Rating:

கருத்துகள் இல்லை: