தேசிய வாசிப்பு மாத அங்குரார்ப்பண நிகழ்வு – காத்தான்குடி பொது நூலகத்தில்.
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் பொது நூலகத்தில், 2025ம் ஆண்டிற்கான “மறுமலர்ச்சிக்கான வாசிப்பு” எனும் கருப்பொருளின் கீழ் தேசிய வாசிப்பு மாத அங்குரார்ப்பண நிகழ்வு (01) நூலகர் பெளமியா ஷறூக் தலைமையில் இடம் பெற்றது.
காத்தான்குடி நகர சபையின் கெளரவ பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஐ.எல்.எம். மாஹிர், நிதி உதவியாளர் எஸ்.எல்.ஏ. றஊப், வருமான பரிசோதகர் எம்.என்.எம். நிப்றாஸ் உள்ளிட்ட நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நூறானியா பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு வாசிப்பு மாத கொடி வழங்கப்பட்டு, மறுமலர்ச்சிக்கான வாசிப்பு நூலக வார பிரகடனமும் வாசிக்கப்பட்டதோடு, மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவ அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய வாசிப்பு மாத அங்குரார்ப்பண நிகழ்வு – காத்தான்குடி பொது நூலகத்தில்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2025
Rating:

கருத்துகள் இல்லை: