உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச் செய்தி
இன்று உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் ஆகும். ஒரு நாட்டின் சமூகங்களில் சிறுவர்கள் மற்றும் முதியோர் இரு மிக முக்கியமான பிரிவுகள். சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் மூத்த தலைமுறையின் தியாகங்கள் இல்லாமல் ஒரு சமூகம் இருக்க முடியாது என்று இத்தினம் நமக்குக் கற்பிக்கின்றது. அதாவது, புதிய தலைமுறையின் எதிர்காலக் கனவுகளையும் மூத்த தலைமுறையின் ஆழ்ந்த அக்கறையையும் இணைப்பதன் மூலம் ஒரு நாடும், சமூகமும் கட்டமைக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு உலக சிறுவர் தினக் கருப்பொருள் "அன்பால் பாதுகாப்போம் - உலகை வெல்வோம்" என்பதாகும். எதிர்கால உலகின் விடியலைப் பிடித்தவர்கள் சிறுவர்கள். அந்த அழகான உலகத்தை களங்கமற்றதாக மாற்றும் பொறுப்பு முழுச்சமூகத்திற்கும் உள்ளது. அன்பான சிறுவர் பருவ சூழலைக் கொண்ட ஒருவர் அன்பான மனிதராக மாறுகிறார். எனவே, அன்பான மனிதர்களை உருவாக்குவது சமூகத்தின் அசைக்க முடியாத பொறுப்பாகும்
நாட்டிலுள்ள அனைத்துக் சிறுவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குவது, அவர்களை சமமாக நடத்துவது, சமூகப் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவது, அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளைத் தடுப்பது போன்ற பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஏனெனில் அவர்களின் புன்னகை நமது நம்பிக்கை, அவர்களின் கனவுகள் நமது எதிர்காலம். இன்று நாம் மிகவும் முன்னேறிய மற்றும் நீதியான சமூகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் போது, இதற்காக அமைக்கப்பட்ட அடித்தளம் எதிர்காலத்தில் வலுவானதாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை: