அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கம் ஊடகங்களில் ‘டெமாகிரட்டிக் ஷட் டவுன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது.இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலத்துக்கு 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசில் செலவீனங்களுக்கான நிதி விடுவிக்கப்படும்.
இந்த நிலையில், நிதி சட்டமூலத்துக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நிதி சட்டமூலத்துக்கு 60 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களிக்காத காரணத்தால் அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகை சமூக ஊடகங்களில் வெளியிட்ட படத்தில் ‘டெமாகிரட்டிக் ஷட் டவுன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளான விமான சேவை, அறிவியல் ஆராய்ச்சி, ராணுவம் ஆகியவற்றின் பணிகள் தொடர்ந்து இயங்கும். ஆனால், அந்த ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படும்.
அதே நேரத்தில் அத்தியாவசியமற்ற பணிகளாக கருதப்படும் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்த வகை அரசு ஊழியர்களுக்கு அமெரிக்க அரசு ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் டாலர் செலவு செய்கிறது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 01, 2025
Rating:

கருத்துகள் இல்லை: