விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் – காத்தான்குடியில் கௌரவிப்பு.!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (03) வெள்ளிக்கிழமை அல் மனார் ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது.
அல் மனார் ஜூம்ஆ பள்ளிவயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில், அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நுஸ்ரி நளீமி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பைறூஸ் அவர்களின் சமூக, ஊடகப் பங்களிப்புகள் குறித்த அறிமுக உரையை அஷ்ஷெய்க் நுஸ்ரி நளீமி நிகழ்த்தினார், ஊர் சார்பில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் கபூர் மதனி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் றமீஸ் ஜமாலி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் கபூர் மதனி, காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகரசபை உறுப்பினர்கள் உட்பட ஊரின் முக்கிய பிரமுகர்கள், உலமாக்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், பிரதேசவாசிகள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் – காத்தான்குடியில் கௌரவிப்பு.!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 03, 2025
Rating:

கருத்துகள் இல்லை: