வெளிநாட்டிலிருந்து கொண்டு ஊடகவியலாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நபருக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு!
(செய்தியாளர்,
பீB.எம்.பயாஸ்)
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீ மீது, வெளிநாட்டில் தொழில் நிமித்தமாக வசித்து வரும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் திட்டமிட்ட முறையில் சமூக ஊடகங்கள் வழியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச தகவல் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற தேசிய ஊடகங்களில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீயின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவரது சுயாதீன ஊடக செயற்பாடுகளைத் தடுக்குமாறு அச்சுறுத்தும் நோக்கிலும், குறித்த நபர் சமூக ஊடகங்களில் அவரது பெயரை நேரடியாக பயன்படுத்தி பதிவுகள் ஊடாக அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக (15) அந்த நபருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும், கணினி குற்ற விசாரணை பிரிவிலும் உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அவதூறு மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், காத்தான்குடியைச் சேர்ந்த மற்றுமொரு ஊடகவியலாளரான பீ.எம். பயாஸ் என்பவரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) குறித்த நபருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும், கணினி குற்ற விசாரணை பிரிவிலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக காத்தான்குடியில் பொறுப்புடன் களப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்களை, வெளிநாட்டிலிருந்து கொண்டு அச்சுறுத்தி வரும் இந்நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே காத்தான்குடி ஊடகவியலாளர்களின் ஒருமித்த கோரிக்கையாக காணப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து கொண்டு ஊடகவியலாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நபருக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு!
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 17, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 17, 2025
Rating:

கருத்துகள் இல்லை: