புதிய கல்விச் சீர்திருத்தமும் பெற்றாரின் பங்களிப்பும்.. பெற்றார்களுக்கான கருத்தரங்கு
புதிய கல்விச் சீர்திருத்தமும் பெற்றாரின் பங்களிப்பும்.. பெற்றார்களுக்கான கருத்தரங்கு.
2026ல் தரம் 06ல் கல்வி கற்க இருக்கும் தற்போது தரம் 05ல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்ஷா அல்லாஹ் பின்வரும் விவரப்படி இடம்பெறும்.
காலம்: 2025.12.20 சனிக்கிழமை
நேரம்:மாலை 03.45 மணி முதல் 5:45 மணி வரை.
இடம் : ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி.
இலவசமாக இடம்பெறும் மேற்படி செயலமர்வில் தரம் 05 மாணவர்களின் பெற்றார்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அழைக்கின்றோம்.
தலைப்புகள்:
1- புதிய கலைத்திட்ட மாற்றம்.
2- தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடங்கள் பற்றிய அறிமுகம்.
3- பாடத் தெரிவுகளை மேற்கொள்ளும் முறை பற்றிய விளக்கம்.
4-புதிய கற்றல் அணுகுமுறைகளில் பெற்றார்கள் பங்களிப்பு செய்ய வேண்டிய விதம்.
5-மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கு பெற்றார்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள்.
6-இனி தவணைப் பரீட்சைகள் இல்லை என்பதால் மாணவர்களுக்கு வகுப்பறைச் செயற்பாட்டின் போது புள்ளியிடப்படும் விதம் தொடர்பான தெளிவு.
7-மாணவர்களின் ஆளுமை மற்றும் ஆன்மீக விருத்திக்கு எவ்வாறு பங்களிக்கலாம்?
8-தற்போதைய அல்பா தலைமுறை மாணவர்களை பெற்றார்கள் அணுக வேண்டிய முறை.
மிகப் பயனுள்ள மேற்படி தலைப்புகளில் தெளிவு பெற விரும்பும் அனைத்துப் பெற்றோர்களும் கட்டாயம் சமுகம் தரவும்.
ஏற்பாடு :பிஸ்மி நிறுவனம், காத்தான்குடி.
புதிய கல்விச் சீர்திருத்தமும் பெற்றாரின் பங்களிப்பும்.. பெற்றார்களுக்கான கருத்தரங்கு
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 19, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: