சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் மர்ஹும். ஜௌபர் அவர்களுக்கான நினைவுப் பகிர்வு
கடந்த சில தினங்களுக்கு முன்னராக எம்மை விட்டும் பிரிந்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரும் ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தருமான மர்ஹும். MCM. ஜௌபர் JP அவர்களுக்கான நினைவுப் பகிர்வு நிகழ்வொன்று நேற்றைய தினம் 2025.10.02ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 08:30 மணிக்கு சம்மேளன கூட்ட மண்டபத்தில் திட்டமிட்ட வகையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்வுரையில் அன்னாரின் சமூக பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் பொதுவாக அன்னார் முன்னெடுத்து வந்த சேவைகள் தொடர்பாகவும் குறிப்பாக சம்மேளன பணிகளில் அன்னாரின் வகிபாகம் மற்றும் சேவைகள், ஏனைய சிறப்பம்சங்கள், முன்மாதிரியான செயற்பாடுகள் தொடர்பாகவும் என நினைவுகள் பகிரப்பட்டன.
ஆன்மீகப் பணிகளில் அன்னார் காட்டிய ஆர்வம் அதனையொட்டி முன்னெடுத்து வந்த சேவைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் செயலாளர் அஷ்ஷெய்க். MIM. ஜவாஹிர் பாலாஹி BA அவர்களினால் நினைவுகள் பகிரப்பட்டன.
நட்பு ரீதியாகவும், சமூக சமய பணிகளிலும் தன்னுடன் நீண்ட தூரம் பயணித்தவர் என்ற வகையில் அவர் தொடர்பான முக்கிய குறிப்புக்கள் சம்மேளன நிர்வாக சபை உறுப்பினரான ஆசிரியர். ALA. ஷிப்லி அவர்களினால் பகிரப்பட்டது.
குடும்பம் சார்பான ஏற்புரையினை அன்னாரின் மகனான MJ. ஜஹீர் ஹஸன் (மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன்) அவர்கள் உணர்வுபூர்வமாக ஆற்றியிருந்தார்.
அதனையடுத்து, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் அன்னாரின் வகிபாகம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளரும் அன்னாரின் சகோதரருமான ஜனாப். MCM. அன்வர் அவர்கள் ஆற்றினார்கள்.
மேலும், நிகழ்வின் விஷேட அம்சமாக துஆப் பிரார்த்தனையொன்று அஷ்ஷெய்க். MMM. இல்ஹாம் பலாஹி BA அவர்களினால் ஆற்றப்பட்டது.
மேற்படி நிகழ்வில் அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஊடகப் பிரிவு,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
2025.10.03
சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் மர்ஹும். ஜௌபர் அவர்களுக்கான நினைவுப் பகிர்வு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 03, 2025
Rating:

கருத்துகள் இல்லை: