இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் (College of Community Physicians of Sri Lanka – CCPSL) 31 ஆவது தலைவர் நியமனம்
இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் (College of Community Physicians of Sri Lanka – CCPSL) 31 ஆவது தலைவராக விசேட வைத்தியர் விந்தியா குமாரபேலி அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், அந்த நியமனம் அண்மையில் (17) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு இணையாக, “Be Connected. Stay Well” என்ற பெயரில் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் முழுமையான நலனை மேம்படுத்துவதற்கான தேசியத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இலங்கையில் உள்ள குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் ஆர்வமூட்டுவதன் மூலமும், குடும்பம், நண்பர்கள், சமூகம் மற்றும் சூழலுடன் உறவை வளர்க்கவும், சமூக நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்கவும் வாய்ப்புகளும் வழிகாட்டலும் வழங்கப்படும்.
இந்த தேசியத் திட்டத்தின் மூலம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி அர்ப்பணிப்புடன் செயற்படுவதை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையின் சுகாதாரப் விளைவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, உலகளவில் மதிப்பிற்குரியவர்களாக இருந்து, தாய் சேய் ஆரோக்கியம், நோய்த்தடுப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாடு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது நினைவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் முன்னாள் தலைவர் வைத்தியர் கபில ஜயரத்ன, செயலாளர் வைத்தியர் ஏ.எஸ். சந்துஷ்ய பெர்னாண்டோ ஆகியோர் உட்பட இலங்கை சமூக மருத்துவர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: