இடைநிறுத்தப்பட்டிருந்த iRoad வேலைத்திட்டம் மாற்றம் காணும் மட்டக்களப்பு
எமது மட்டக்களப்பு மாவட்டம் ஒரு புதிய மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது.
இடைநிறுத்தப்பட்டிருந்த iRoad வேலைத்திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இணக்கப்பாட்டுடன் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
இந்த மாற்றம் வெறும் சாலைகளுக்கானது அல்ல; இது மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கான மாற்றம்,
கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இலகுவான, வேகமான போக்குவரத்து சாத்தியமாகும்.
விவசாயப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திகள் சந்தையை விரைவாகச் சென்றடைய, வர்த்தகம் பெருகும்.கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான அணுகல் அதிகரித்து, இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாகும்.
போக்குவரத்து அமைச்சர் கௌரவ. பிமல் ரத்நாயக்க மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கௌரவ. காந்தசாமி பிரபு ஆகியோரின் வழிகாட்டலில், இந்த வளர்ச்சிப் பாதை செப்பனிடப்படுகிறது.
இந்த மாற்றம் நம்மில் இருந்து தொடங்குகிறது. ஒன்றிணைந்து பயணிப்போம், வளமான மட்டக்களப்பை உருவாக்குவோம்.
இடைநிறுத்தப்பட்டிருந்த iRoad வேலைத்திட்டம் மாற்றம் காணும் மட்டக்களப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:

கருத்துகள் இல்லை: