பத்மநாபா அறிவியல் கழகம், சிவில் சமூக ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு இரு நாள் பயிற்சிப் பட்டறை
(ஜெ.எல்.எம். ஷாஜஹான்)
போதைப் பொருட்கள் தொடர்பான தெளிவை பகிர்ந்துஉயிர்களை காப்போம் என்னும் தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கான
இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை பத்மநாபா அறிவியல் கழகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மன்றசா மண்டபத்தில் சென்ற 11,12ம் திகதிகளில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், சிறைச்சாலை
அத்தியட்சகர் ந.பிரபாகன், அரசியல் ஆய்வாளரும், பத்மநாபா அறிவியல் கழகத்தின் ஸ்தாபகரும் பிரான்சில் வசிப்பவருமான தோழர் சோழையூரான் (ஜோதி) மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் தலைவர் திரு.மாமங்கராஜா, கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
மேற்படி பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதல் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்மநாபா அறிவியல் கழகம், சிவில் சமூக ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு இரு நாள் பயிற்சிப் பட்டறை
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 13, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 13, 2025
Rating:



















கருத்துகள் இல்லை: