ஜனாதிபதி நிதியத்தால் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் (02) காலை பதுளை நூலக கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரை நிகழ்த்தியதோடு நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தற்போதைய அரசாங்கம் கல்வியில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருவதாகவும், ஒரு நாட்டில் கல்வியில் முதலீடு செய்வது போன்ற முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முதலீடு எதுவும் இல்லை என்றும் கூறினார். குழந்தைகள் பெறும் கல்வி மூலம் நாட்டிற்கு சேவை செய்தால், அந்த முதலீட்டின் பலனை நாடு அடைய முடியும் என்று சபாநாயகர் தெரிவித்தார் .
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:


கருத்துகள் இல்லை: