Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகநலன்களை விசாரிப்பு

இடம்பெயர்ந்துள்ள மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து உடனடியாக அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுங்கள்"பிரதமர் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தல்.


முழு நாட்டையும் பாதித்த "திட்வா" சூறாவளியினால் களனி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த இஹல போமிரிய மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களின் சுகநலன்களை விசாரிப்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  29 அப்பிரதேசத்திற்குச் சென்றிந்தார்.


அங்கு, போமிரிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்திருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் சுகநலன்களைப் பற்றி பிரதமர் விசாரித்தார்.


இடம்பெயர்ந்த மக்கள் தற்போது எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக வழங்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் நிலைமை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். 



அத்துடன், ஏற்பட்டுள்ள தேசியப் பேரழிவைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்காக நிவாரணங்களை வழங்குவதிலும், அவர்களைப் பாதுகாப்பதிலும் உழைக்கும் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.


இடம்பெயர்ந்துள்ள மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து உடனடியாகத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறு அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.


தற்போது இஹல போமிரிய மற்றும் அதனை அண்மித்த வெள்ளத்தால் இடம்பெயர்ந்த சுமார் நூறு குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் இஹல போமிரிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தங்கியிருக்கின்றனர். இந்த மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றத் துரிதமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.



அதனையடுத்து, கொலன்னாவ பிரதேசத்தின் அனர்த்த நிலைமை குறித்து ஆராய்வதற்காகச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, முல்லேரியா கல்வானை பழைய இராஜமஹா விகாரை மற்றும் வெல்லம்பிட்டி வித்தியாவர்த்தன வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தங்குமிடங்களுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.


அதன் பின்னர் கொலன்னாவப் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பிரதமர், அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நிவாரண வேலைத்திட்டம் குறித்தும், உணவு மற்றும் சுகாதார உபகரணங்களை உடனடியாக மக்களுக்கு வழங்கிவரும் செயல்திட்டம் குறித்தும் விசாரித்தார்.


இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், மாநகர மேயர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.
பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகநலன்களை விசாரிப்பு Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 30, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.