அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக – காத்தான்குடியில் விஷேட துஆ பிரார்த்தனை.!!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான்கு சமய திணைக் களங்களினாலும் விஷேட சமய நிகழ்வுகளை மேற் கொள்ளுமாறு புத்தசாசன, மத மற்றும் சமய விவகார அமைச்சு ஆலோசனை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு பகுதியாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பிரகாரம், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா) வளாகத்தில் (09) மஹ்ரிப் தொழுகையின் பின் விஷேட துஆ பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவு நிகழ்வு அஷ்ஷெய்க் இல்ஹாம் பலாஹியின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விஷேட சமய நிகழ்வில் காத்தான்குடி ஜம்மியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அமீன் பலாஹி சிறப்பு சொற்பொழிவு மற்றும் பிரார்த்தனையை நிகழ்த்தினார்.
உயிரிழந்தவர்களின் மறுமையான அமைதி, பாதிக்கப்பட்டோரின் விரைவான குணமடைவு மற்றும் நாட்டின் பாதுகாப்பு, அமைதிக்காகவும் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பிரார்த்தனைகள் மேற்
கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்கள், ஹிக்மா பகுதிநேர குர்ஆன் மனனபீட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு ஒன்றுபட்ட மனதுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ளும் உள்ளார்ந்த சக்தியையும் நம்பிக்கையையும் பொதுமக்களில் உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக – காத்தான்குடியில் விஷேட துஆ பிரார்த்தனை.!!!
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 10, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 10, 2025
Rating:







கருத்துகள் இல்லை: