பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி அதிகாரிகளிடம் கையளிப்பு..
(எம்.பஹத் ஜுனைட்)
மட்டக்களப்பு மத்தி வலையத்திற்குட்பட்ட காத்தான்குடியில் உள்ள பாடசாலைகளில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சேகரிக்கப்பட்ட சீருடைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09) காத்தான்குடி மத்தி கல்வி வலைய அதிகாரிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலைய உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.பாயிஸ், சிறுவர் விளையாட்டு இணைப்பாளர் எஸ்.எல்.எச்.இனாமுல்லாஹ் , ஆசிரிய ஆலோசகர் யூ.எல்.எம்.பைறூஸ், முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எஸ்.பசீர்,சென் ஜோன் அம்பியூலன்ஸ் உதவி மாவட்ட ஆணையாளர் என்.எம்.எம்.பாயிஸ் மற்றும் அல் ஹிறா வித்தியாலயத்தின் சென் ஜோன் அம்பியூலன்ஸ் அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப்படை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி அதிகாரிகளிடம் கையளிப்பு..
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 09, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 09, 2025
Rating:








கருத்துகள் இல்லை: