பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுமுறை விடுதிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு
தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் நிர்வாகக் கொள்கையை மேலும் எடுத்துச் செல்லும் வகையில், பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுமுறை விடுதிகளுக்கான ஆன்லைன் ஊடாக முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று (29) அமைச்சின் கேட்போர் கூடத்தில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் நடைபெற்றது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.pubad.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் இந்த வசதியை அணுகலாம்.
நிகழ்வில் பேசிய அமைச்சர், தங்கள் கைகளில் உள்ள மொபைல் தொலைபேசியிலிருந்து விடுமுறை விடுதியை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பு என்றும், எதிர்காலத்தில், தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் செயல்முறையை அமைச்சு வலுப்படுத்தி மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார உள்ளிட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 30, 2025
Rating:

கருத்துகள் இல்லை: