Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பு மாநகரசபையில் நாளை பலப்பரீட்சை!



கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியிலான பின்னடைவு என கருதப்படுகின்றது.

இந்நிலையிலேயே வரவு- செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக நாளை முன்வைக்கப்படுகின்றது.

வாக்கெடுப்பின்போது வரவு- செலவுத் திட்டம் நிறைவேறும் எனவும், எதிரணி உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்பார்கள் எனவும் கொழும்பு மேயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, வரவு- செலவுத் திட்டம் வெல்லும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையில் நாளை பலப்பரீட்சை! Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 30, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.