அனர்த்த நிதி நிவாரண சேகரிப்புக்கு நிதி உதவி அளியுங்கள்: சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விடுக்கும் அன்பான வேண்டுகோள்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கடல் கடந்து வாழும் உறவுகளுக்கும், உள்ளூர்களிலும் வாழும் ஈமானிய உள்ளங்களுக்கும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அன்பான வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிமாவட்ட மக்களுக்கான நிவாரணப் பணியினை எமது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புக்கள் சேர்ந்து
நிவாரணம் சேகரிக்கும் பொருட்டு நேற்று (01)ஆம் திகதி சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, சாய்ந்தமருது - மாளிகைகாடு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அல்ஹாஜ் மீராமுகைடீன் மீராசாஹிப் என்ற
Meeramohaideen Meerasahibu
A/C No 0220601531001
Amana #Bank
Kalmunai
பங்களிப்புச் செய்யக்கூடிய சகோதரர்களின் பங்களிப்பை இக்கணக்கினூடாக மாத்திரமே வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கிலக்கம் டிசம்பர் 06 ஆம் திகதி வரையுமே உங்கள் பணத்தினை வைப்பிலிட முடியும். டிசம்பர் 07 ஆம் திகதி இக்கணக்கிலக்கம் மூடப்படும். அதன் பின்னர் யாரும் வைப்பிலிட வேண்டாம் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
குறிப்பு : 06 பேர் கொண்ட நம்பிக்கையான பொறுப்புதாரிகளும் வங்கிக் கணக்கிக்கான இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் விஷேட அம்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிதி நிவாரண சேகரிப்புக்கு நிதி உதவி அளியுங்கள்: சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விடுக்கும் அன்பான வேண்டுகோள்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 02, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 02, 2025
Rating:

கருத்துகள் இல்லை: